புது தில்லி: மத்திய அரசு தற்போது எடுத்து வரும் முயற்சிகளின் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சரக்கு வாகனங்களுக்கான வாடகை அதிகரித்து, அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடுமையான துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் மத்திய அரசு தற்போது எடுத்து வரும் முயற்சிகளின் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தில்லியில் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி புதனன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மத்திய அரசானது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தனது கலால் வரியில் இருந்து ரூ. 1.50 குறைத்துக் கொள்வது என்று முடிவு செய்துள்ளது.
அதேபோல் எண்ணெய் நிறுவனங்களும் தங்களது லாபத்திலிருந்து ரூ. 1 குறைத்துக் கொள்வதென்று முடிவு செய்துள்ளன.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது லிட்டருக்கு ரூ. 2.50 குறையும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரதமர் மோடியின் தலையீட்டின் பெயரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உசிலம்பட்டி: மின்னல் பாய்ந்து கூலித் தொழிலாளிகள் 3 பேர் பலி!

அறிமுக உலக யோகாசனம் சாம்பியன்ஷிப்..! ஒலிம்பிக்கில் சேர்க்கவும் திட்டம்!

தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மைதான்! ஓ.எஸ். மணியன்

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகல்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



