பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பை வெற்று அறிவிப்பு என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு தற்போது உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் ரூ.1.50-ஐ மத்திய அரசு குறைத்தது. எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1 தள்ளுபடி அளித்தன. இதன்மூலம், பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையை பின்பற்றி, பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களும் பெட்ரோல், டீசல் மீதான வரியில் ரூ.2.50 குறைத்தன. இதன்படி, அந்த மாநிலங்களில் பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைந்தது. ஆனால் பிற மாநிலங்களில் ரூ.2.50 மட்டுமே குறைந்தது.
இருப்பினும், வரி குறைப்பு நடவடிக்கைக்குப் பிறகும், பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதை காங்கிரஸ் கட்சி தற்போது விமர்சித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பெட்ரோல்-டீசல் விவகாரத்தில் நாட்டு மக்களை மோடி அரசு தொடர்ந்து கொள்ளையடித்து வருகிறது. நாட்டு மக்களின் பைகளில் இருக்கும் பணத்தை கொள்ளையடிப்பதை பிரதான தொழிலாக பாஜக கொண்டுள்ளது. கடந்த 3 நாள்களில் மட்டும், தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 53 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 87 காசுகளும் உயர்ந்துள்ளன. திருவிழாக்கள் காலங்களிலும் மோடி அரசின் கொள்ளையின் தீவிரம் குறையவில்லை என்று அந்தப் பதிவுகளில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியில் ரூ.1.50 குறைத்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்; இதன்பிறகும், அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன்மூலம் வரி குறைப்பு அறிவிப்பு என்பது வெற்று அறிவிப்பு என்பது நிரூபணமாகியுள்ளது என்றார். அவரிடம் ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவதற்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் முதல்வர்கள் விரும்பாதது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல்-டீசல் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே காங்கிரஸின் கோரிக்கை ஆகும்; இதில் கட்சிக்கு 2 வித நிலைப்பாடு இல்லை. நாடு முழுவதும் 21 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. பாஜக நினைத்தால், ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல்-டீசலை கொண்டு வர முடியும் என்றார்.
குஜராத்தில் வடமாநிலத்தவர் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்த கேள்விக்கு பிரியங்கா சதுர்வேதி பதிலளிக்கையில், இந்தத் தாக்குதலை தடுக்க முடியவில்லையெனில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியும், பிரதமர் நரேந்திர மோடியும் பதவி விலக வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 5-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

பருத்தி இறக்குமதி: சுங்க வரியிலிருந்து தற்காலிக விலக்கு - மத்திய அரசு
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


