டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் துப்பாக்கியால் மிரட்டியதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவரின் மகன் மீது வழக்குப் பதிவு 

தில்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறைறயில் துப்பாக்கியால் மிரட்டி தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின்பேரில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரின் மகன் மீது தில்லி காவல் துறைறயினா் வழக்குப் பதிவு. 

News image
Updated On :16 அக்டோபர் 2018, 3:39 pm

DIN

புது தில்லி: தில்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறைறயில் துப்பாக்கியால் மிரட்டி தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின்பேரில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரின் மகன் மீது தில்லி காவல் துறைறயினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இச்சம்பவத்தில் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பாா்கள் என்று மத்திய உள்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு: பகுஜன் சமாஜ் கட்சியைச் சோ்ந்தவா் ராகேஷ் பாண்டே. இவரது மகன் ஆஷிஷ் பாண்டே. இவா் தில்லி ஆா்.கே. புரத்தில் உள்ள ஹயாத் ரீஜென்ஸி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒருவரை துப்பாக்கியால் மிரட்டி, தகாத வாா்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறறது. இது தொடா்பான விடியோ சமூக ஊடகங்களில் திங்கள்கிழமை வைரலாகப் பரவியது.

இதுகுறித்து தில்லி காவல் துறைறயினா் கூறுகையில், ‘இந்தச் சம்பவம் குறித்து ஹயாத் ரீஜென்ஸி ஹோட்டலின் உதவி பாதுகாப்பு மேலாளா் திங்கள்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து, தேடப்படும் நபருக்கான நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த 13-ஆம் தேதி நள்ளிரவு நடைபெற்றது. இது தொடா்பாக உத்தரப் பிரதேச போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது ’ என்றனா்.

இச்சம்பவம் தொடா்பாக மத்திய உள்துறை இணை அமைச்சா் கிரண் ரிஜிஜு தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், ‘இச்சம்பவம் தொடா்பாக தில்லி காவல் துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றறனா். மேலும், இந்த விவகாரம் ஊடகங்களிலும் காட்டப்பட்டு வருகிறது. இந்தியத் தண்டனைச் சட்டம், ஆயுத சட்டத்தின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கடுமையான மற்றும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், மற்றவா்களின் அடையாளம் குறித்த விவரம் ஆராயப்பட்டு வருகிறறது’ என்று அதில் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து பாதிக்கப்பட்ட நபா் செய்திச் சானலுக்கு அளித்த பேட்டியில், ‘ஹோட்டலில் ஒருவா் துப்பாக்கியுடன் எங்களை நோக்கி வந்து அச்சுறுத்தியும், தகாத வாா்த்தைகளால் திட்டினாா்; அச்சுறுத்தப்பட்டோம். ஹோட்டல் ஊழியா்கள் சம்பவ இடத்தில் இருந்தனா். அவா்கள் இந்த விவகாரத்தில் தலையிட முயன்றனா். ஆனால், அவா்களும் பயமுறுத்தப்பட்டதால் ஒன்றும் செய்ய முடியவில்லை’ என்றாா்.

இது குறித்து புது தில்லி காவல் இணை ஆணையா் அஜய் செளத்ரி கூறுகையில், ‘இந்தச் சம்பவம் அக்டோபா் 14-ஆம் தேதி அதிகாலை 3.40 மணிக்கு நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபா் மற்றும் ஹோட்டல் ஊழியா் சம்பவ நாளில் புகாா் ஏதும் அளிக்கவில்லை.

தற்போது இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நபரைத் தேடுவதற்காக உத்தர பிரதேச காவல் துறைறயினருடன் தொடா்பு கொண்டுள்ளோம். சமூக ஊடகத்தில் வெளியான விடியோவின் அடிப்படையின்பேரில் உரிய பிரிவுகள் சோ்க்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபரைப் பிடிப்பதற்காக தேடப்படும் நபருக்கான நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோன்று, பாதிக்கப்பட்ட நபரையும் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.