புது தில்லி: பாலியல் புகார்களை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்குமாறு கோரி அரசியல் கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
'மீ டூ' என்ற தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சுட்டுரை மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக பகிர்ந்து வருகின்றனர். அண்மையில் நடிகைகள் தனு ஸ்ரீ தத்தா, கங்கனா ராவத், பாடகி சின்மயி ஆகியோர் திரைத் துறையில் தாங்கள் எதிர்கொண்ட சில கசப்பான அனுபவங்களை அதில் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
வெளியுறவுத் துறை விவகாரங்களுக்கான இணையமைச்சர் எம்.ஜே. அக்பர், இதற்கு முன்னர் பல்வேறு பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஊடகத் துறையில் அவர் தீவிரமாக இயங்கியபோது பெண் பத்திரிகையாளர்கள் பலருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை எம்.ஜே. அக்பர் அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது கடும் விமர்சனங்களுக்கு வித்திட்டது.
இந்த பிரசாரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக இப்போது பாலியல் புகார்களை விசாரிக்க விசாரணைக் குழுவை அமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சிகளுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
பாலியல் புகார்களை விசாரிக்கும் பொருட்டு உள் விசாரணைக் குழுவை அமைக்க கோரி அரசியல் கட்சியின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்தியாவில் 6 தேசிய கட்சிகள் மற்றும் 90 சிறிய கட்சிகள் உள்ளது. அரசியல் கட்சிகளின் அலுவலகங்களில் நூற்றுக்கணக்கான பெண்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்க வேண்டியது அவசியம் என்று நான் நினைக்கிறேன்,” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு எதிரொலி: சீனாவில் எரிபொருள் விலை அதிரடியாக உயர்வு!

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
ஈரானை விட்டுவைத்தால் இஸ்ரேல் அழிக்கப்பட்டிருக்கும்: முன்னெச்சரிக்கையாகத் தாக்குதல்! - டிரம்ப்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு 5 இடங்கள்!
வீடியோக்கள்

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

