இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

இந்தோ-சீனா போர் முடிந்து 56 ஆண்டுகளுக்குப் பிறகு இழப்பீடு பெறும் அருணாச்சல் கிராமத்தினர்

இந்தியா - சீனா இடையேயான போர் முடிந்து சுமார் 56 ஆண்டுகளுக்குப் பிறகு அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கிராமத்தினருக்கு ரூ.38 கோடி அளவுக்கு நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

News image
Updated On :22 அக்டோபர் 2018, 12:30 pm

PTI


இந்தியா - சீனா இடையேயான போர் முடிந்து சுமார் 56 ஆண்டுகளுக்குப் பிறகு அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கிராமத்தினருக்கு ரூ.38 கோடி அளவுக்கு நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

1962ம் ஆண்டு இந்தியா - சீனா இடையே போர் மூண்டபோது, ராணுவ முகாம்கள் அமைக்கவும், பங்கர்கள் மற்றும் பேரக்ஸ்கள் அமைக்கவும் கைப்பற்றப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடாக அருணாச்சலப்பிரதேச கிராமத்தினருக்கு ஒட்டுமொத்தமாக ரூ.38 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

கடந்த 56 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு இழப்பீடுத் தொகை வழங்கப்படாத நிலையில், தற்போதுதான் விவசாயிகள் இழந்த நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை பெற்றுள்ளனர்.

மேற்கு காமேங் மாவட்டத்தில் உள்ள கிராம மக்களிடம் நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.