புது தில்லி: நாடு முழுவதும் ஆறு எய்ம்ஸ் கிளைகளில் இயக்குநர் பதவிகள் உருவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
உத்தரபிரதேச மாநிலத்தில் கோரக்பூர் மற்றும் ரேபரேலி, பஞ்சாபில் பதிண்டா, அசாமில் கெளஹாட்டி, ஹிமாச்சலப்பிரதேசத்தில் பிலாஸ்பூர் மற்றும் ஜார்கண்ட்டின் தியோஹா ஆகிய ஆறு இடங்களில் அமைந்துள்ள எய்ம்ஸ் கிளைகளில் இயக்குநர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட உள்ளன.
இந்த பதவிக்கு அடிப்படைச் சம்பளமாக ரூ.2.25 லட்சம் வழங்கப்படும். இயக்குநரே அக்கிளையின் ஒட்டுமொத்த செயல்பாடுகளுக்கும் பொறுப்பாளராக இருப்பார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

ஃபிஃபா உலகக் கோப்பை: முதல் அணியாக அடுத்த சுற்றுக்குத் தேர்வான மெக்சிகோ!

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசி நாள் எப்போது?
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu



