கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து: வாகனங்கள் சிக்கின; 5 பேர் பலி?
தெற்குக் கொல்கத்தாவின் மஜ்ஹேர்ஹட் பகுதியில் மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில், அதில் சில வாகனங்கள் சிக்கிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேற்கு வங்க மாநிலம் தெற்குக் கொல்கத்தாவின் மஜ்ஹேர்ஹட் பகுதியில் மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில், அதில் சில வாகனங்கள் சிக்கிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலிப்போரா என்ற பகுதியில் இருந்த இந்த மேம்பாலம், திடீரென இடிந்து விழுந்ததில், அதில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்கள், கார் உள்ளிட்டவை சிக்கிக் கொண்டன. தீயணைப்புப் படை வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
மீட்புப் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியானதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...