கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

மேற்கு வங்கத்தில் ஒரே வாரத்தில் இரண்டாவது பாலம் இடிந்து விழுந்து விபத்து

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் சிலிகுரி பகுதியில் இருந்த மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் டிர்க் ஓட்டுநர் காயமடைந்தார்.

News image
Updated On :7 செப்டம்பர் 2018, 5:38 am

PTI

சிலிகுரி: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் சிலிகுரி பகுதியில் இருந்த மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் டிர்க் ஓட்டுநர் காயமடைந்தார்.

மேற்கு வங்க மாநிலத்தின் வட பகுதியில் உள்ள மிகப்பெரிய நகரமான சிலிகுரியில் இந்த விபத்து இன்று காலை நேரிட்டுள்ளது. 

மன்கஞ்ச் பகுதியை சிலிகுரியுடன் இணைக்கும் மேம்பாலத்தில் ஒரு டிரக் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மேம்பாலம் இடிந்து விழுந்தது. அதில், டிரக் மேம்பாலத்தின் ஒரு பகுதியில் தொங்கிக் கொண்டு நின்றது.

இதில் படுகாயமடைந்த டிரக் ஓட்டுநர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரே வாரத்தில் இரண்டாவது மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியிருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த 4ம் தேதி மஜேர்ஹத் பகுதியில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.