100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

ஊழல் தடுப்பு அதிகாரிகள் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உரை

தில்லியில் உள்ள மத்திய ஊழல் கண்காணிப்பு அலுவலகத்தில்(சிவிசி) ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் அடுத்த வாரம் உரையாற்ற உள்ளார்.

Published On :


தில்லியில் உள்ள மத்திய ஊழல் கண்காணிப்பு அலுவலகத்தில்(சிவிசி) ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் அடுத்த வாரம் உரையாற்ற உள்ளார்.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக சி.வி. செளதரி பொறுப்பேற்ற பிறகு, ஊழல் தடுப்பு அதிகாரிகளிடம் மற்ற அரசு உயர் அதிகாரிகள் உரை நிகழ்த்துவது மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து சிவிசி அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஊழல் தடுப்பு அதிகாரிகளிடம் வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் உரையாற்ற உள்ளார். வங்கித் துறை மற்றும் நிதித் துறையில் உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் பேச உள்ளார். மத்திய அரசின் உயர் அதிகாரிகளிடம் ரிசர்வ் வங்கி ஆளுநர் உரையாற்றுவது இதுவே முதல் முறை. அரசுத் துறைகள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஊழல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் மூத்த அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கு கொள்ள உள்ளனர்.
முன்னதாக, நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த், செபி அமைப்பின் முன்னாள் தலைவர் எம். தாமோதரன், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் அஜய் பூஷண் பாண்டே உள்ளிட்ட பலர் சிவிசி அலுவலகத்தில் உரை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.