ஆனால் இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் தற்போது பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் அவியேஷன் அளித்திருக்கும் விளக்கத்தில், ரஃபேல் போர் விமானம் தொடர்பாக மட்டுமே இந்தியா - பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில், பிரான்ஸ் நிறுவனம், தாங்கள் கூட்டு வைத்துக் கொள்ளும் நிறுவனத்தை தேர்வு செய்வதில் இந்திய அரசு எந்த தலையீட்டையும் செய்யவில்லை. கூட்டு நிறுவனத்தை நாங்களே தேர்வு செய்து ஒப்புதலுக்காக அனுப்பும் சுதந்திரம் தங்களிடமே இருந்ததாகவும், தாங்களே ரிலையன்ஸ் டிபென்ஸ் லிமிடட் நிறுவனத்தை தேர்வு செய்து இந்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.