சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்?திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

ரஃபேல்: திருடியவர்களிடம் இருந்து நியாயம் பெற்றுத் தருவோம் - ராகுல் உறுதி

ரஃபேல் ஒப்பந்தத்தின் மூலம் ஏழை மக்களிடம் திருடிய பணத்தை பிரதமர்  மோடி தனது நண்பர் அனில் அம்பானியில் பையில் போட்டுள்ளார் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

News image
Updated On :25 செப்டம்பர் 2018, 10:36 am

PTI


புது தில்லி: ரஃபேல் ஒப்பந்தத்தின் மூலம் ஏழை மக்களிடம் திருடிய பணத்தை பிரதமர்  மோடி தனது நண்பர் அனில் அம்பானியில் பையில் போட்டுள்ளார் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக தனது கருத்துகளை டிவிட்டர் மூலம் பதிவு செய்து வரும் ராகுல், தெரிவித்திருப்பதாவது, இந்தியாவுக்காக பணியாற்றிய அனைத்து விமானப் படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள், விமானப் படை விமானிகளை இழந்த குடும்பத்தினர், ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் லிமிடட் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் என அனைவரின் வலிகளையும் நாங்கள் உணர்கிறோம்.
உங்களது உணர்வுகளை நாங்கள் அறிகிறோம்.
உங்களை அவமரியாதை செய்து, உங்களிடம் இருந்து திருடியவர்களிடம் இருந்து நியாயத்தை நிச்சயம் பெற்றுத் தருவோம் என்று டிவீட் செய்துள்ளார்.

முன்னதாக ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தின் மூலம் ஏழை மற்றும் விமானப் படையிடம் இருந்து பணத்தைக் கொள்ளையடித்து, பிரதமர்  மோடி தனது நம்பிக்கைக்குரிய நண்பர் பாக்கெட்டில் போட்டுள்ளார் என்று ராகுல் குற்றம்சாட்டியிருந்தார்.

நேற்று ரஃபேல் ஒப்பந்தம் குறித்துப் பேசிய ராகுல், பிரதமர் மோடி ஏழை மக்களிடம் திருடிய பணத்தை தொழிலதிபர் அனில் அம்பானிக்குக் கொடுத்துள்ளார்.

ரஃபேல் போர் விமானம் தொடர்பாக எழும் அனைத்து சந்தேகங்களுக்கும் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்றும் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

ஏழை, விமானப் படையில் பணியாற்றி வீர மரணம் அடைந்த வீரர்கள் மற்றும் பணியாற்றும் வீரர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி பணத்தை எடுத்து அனில்  அம்பானியின் பாக்கெட்டில்  போட்டுள்ளார்.

விமானக் கட்டுமானத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவனத்துக்கு 70 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. ஆனால் அனில் அம்பானிக்கு 10 நாட்கள் கூட அனுபவம் இல்லை. ஆனால் விஜய் மல்லையா போன்று அனில் அம்பானிக்கு ரூ.45 ஆயிரம் கோடி கடன் உள்ளது என்று தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.