அதேசமயம் தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் க. பாண்டியராஜன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர். நட்ராஜ், எஸ். செம்மலை, என். மனோரஞ்சிதம், ஓ.கே. சின்னராஜ், ஏ. மனோகரன் ஆகிய 7 பேருக்கு எதிராக டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களும், தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களான வெற்றிவேல், பார்த்திபன், ரங்கசாமி, தங்கத் தமிழ்ச்செல்வன் ஆகியோரது சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டன. அதில், இந்த விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் சட்ட ரீதியாக ஆராயாமல் உத்தரவு பிறப்பித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.