சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்?திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

2019 குடியரசுத் தின விழாவில் சிறப்பு விருந்தினராக டொனால்ட் டிரம்ப் பங்கேற்க வாய்ப்பு

இந்தியாவுக்கு வருகை தருவதை, இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் முன்னேற்றமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருதுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

News image
Updated On :29 செப்டம்பர் 2018, 7:36 am

PTI


நியூ யார்க்: இந்தியாவுக்கு வருகை தருவதை, இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் முன்னேற்றமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருதுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

முன்னதாக, 2019ம் ஆண்டு தில்லியில் நடைபெறும் குடியரசுத் தின விழாவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில், அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியா - அமெரிக்கா இடையேயான நல்லுறவு மேம்படுவதில், இந்தியப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று டொனால்ட் டிரம்ப் கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து மரியாதை நிமித்தமாக பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவை மிகவும் பிடிக்கும். எனது நண்பர் பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.