/

காஷ்மீர் விவகாரம்: இன்று இரவு 8 மணிக்கு நம்மைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:45 am

DIN

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.

இது குறித்து பிரதமர் அலுவலக டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது, காஷ்மீர் மாநிலத்தை லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றும் நிகழ்வு இன்று மாலை 4 மணிக்கு அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்படும் என்று இன்று காலை அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த டிவீட் சில மணி நேரத்தில் டிவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. 

முன்னதாக ஆகஸ்ட் 7ம் தேதி நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராத வகையில், முன்னாள் மத்திய அமைச்சர்  சுஷ்மா சுவராஜ் மரணம் அடைந்ததால், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று அவர் உரையாற்றுவார் என்று டிவிட்டரில் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதுவும் நீக்கப்பட்டு, பிறகு, பிரதமர் அலுவலகத்தில் டிவிட்டர் பக்கத்தில் இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுவார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.