எய்ம்ஸ் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அருண் ஜேட்லி அனுமதி
உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


புது தில்லி: உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான முதலாவது அமைச்சரவையில் நிதியமைச்சராகப் பணியாற்றியவர் அருண் ஜேட்லி. ஆனால் ஆட்சியின் இறுதிக்காலத்தில் சிறுநீரகக் கோளாறு காரணமாக, அவர் முதலில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும், பின்னர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
தொடர் உடல்நலக் குறைபாட்டின் காரணமாக அவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. அமைச்சரவையிலும் இடம்பெறவில்லை. வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார்.
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அருண் ஜேட்லி தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் வெள்ளிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜேட்லி உடல்நிலை குறித்த தகவல் அறிந்தவுடன் பிரதமர் மோடி உடனடியாக மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...