/

ஐஎன்எக்ஸ் வழக்கு: செப்டம்பர் 5-ந்தேதி  வரை ப.சிதம்பரத்தைக் கைது செய்ய அமலாக்கத்துறைக்குத் தடை 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில்  செப்டம்பர் 5-ந்தேதி  வரை ப.சிதம்பரத்தைக் கைது செய்ய அமலாக்கத்துறைக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:57 am

DIN

புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில்  செப்டம்பர் 5-ந்தேதி  வரை ப.சிதம்பரத்தைக் கைது செய்ய அமலாக்கத்துறைக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சி.பி.ஐ. ப.சிதம்பரத்தைக் கைது செய்து காவலில் வைத்து விசாரித்து வருகிறது. அவருடைய விசாரணைக் காவல்  30-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அமர்வில் நடைபெற்று வருகிறது.

இன்றைய விசாரணையில் அமலாக்கத்துறை சார்பில் துஷார் மேத்தாவும், ப.சிதம்பரம் தரப்பில்  மூத்த வழக்கறிஞர் கபில்சிபிலும் வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் செப்டம்பர் 5-ந்தேதி  வரை ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்யத் தடை விதித்து உத்தரவிட்டனர். அத்துடன் ப.சிதம்பரத்திற்கு எதிரான ஆவணங்களை சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்யவும்  நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.