/

ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் சிதம்பரம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தது அமலாக்கத் துறை

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரம் தொடர்பான விசாரணை ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது.

News image
pc
Updated On :31 ஜனவரி 2024, 9:57 am

DIN


புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரம் தொடர்பான விசாரணை ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்திடம் இதற்கு முன்பு நடத்திய விசாரணையில் கிடைத்த விவரங்கள், கேள்வி -  பதில் உள்ளிட்டவற்றை சீலிட்ட கவரில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது அமலாக்கத் துறை.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் தரப்பில் அமலாக்கத் துறைக்கு எதிராக தொடரப்பட்ட முன் ஜாமீன் வழக்கில் அமலாக்கத் துறையினர், விசாரணை விவரங்களை இன்று தாக்கல் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.