மேற்கு வங்கத்தில் இணைய சேவைக்கு தடை: அஸ்ஸாமில் ஊரடங்கு தளர்வு
மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட்டத்தில் இணைய சேவைக்கு செவ்வாய்க்கிழமை தடை விதிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாமிலுள்ள திப்ருகார் மாவட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.


மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட்டத்தில் இணைய சேவைக்கு செவ்வாய்க்கிழமை தடை விதிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாமிலுள்ள திப்ருகார் மாவட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும், தில்லியிலும் வன்முறைச் சம்பவங்களும் ஏற்பட்டன.
இதனால் பாதுகாப்பு தொடர்பான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில், அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள திப்ருகர் மாவட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குவாஹட்டியில் கடந்த இரு தினங்களாக ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி வரை இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...