மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

இந்தியா, சீனா எல்லை விவகாரம்: நாளை பேச்சுவார்த்தை

இந்தியா, சீனா இடையிலான எல்லை விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை தலைநகர் தில்லியில் சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :20 டிசம்பர் 2019, 9:06 am

DIN

இந்தியா, சீனா இடையிலான எல்லை விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை தலைநகர் தில்லியில் சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருநாடுகளுக்கு இடையிலான 22-ஆவது சிறப்புப் பிரதிநிதிகளின் கூட்டத்தில் இந்தியா தரப்பில் பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனா சார்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, ஆகியோர் பிரதிநிதகளாகப் பங்கேற்பார்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடத்திய அதிகாரப்பூர்வமற்ற சந்திப்புக்கு பின்னர் இருநாட்டுப் பிரதிநிதகள் எல்லை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.