/

மேற்கு வங்க ஆளுநரை முற்றுகையிட்ட ஜாதவ்பூர் பல்கலை மாணவர்கள்

ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கரை பல்கலை மாணவர்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:39 pm

DIN


கொல்கத்தா: ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கரை பல்கலை மாணவர்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கருப்புக் கொடி காட்டியதோடு, அவருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

அவர் வந்த காரை முற்றுகையிட்ட மாணவர்கள், அவருக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம், ஆளுநர் சாமாதான முயற்சியில் ஈடுபட்டார். உங்களது கருத்துகளை அனுப்புமாறு மாணவர்களை கேட்டுக் கொண்டார். நான் எந்த அரசின் பிரதிநிதியும் அல்ல, அரசியலமைப்பின் பிரதிநிதி என்று மாணவர்களிடம் கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில் தன்கருக்கு எதிராக மாணவர்கள் நடத்தும் இரண்டாவது போராட்டமாக இது அமைந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.