/

மனைவியைக் கொடூரமாக கொன்றுவிட்டு கணவன் தப்பியோட்டம் 

சீனிவாஸ் ராவ் என்பவர் தனது மனைவி சுசிலாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தப்பி ஓடிவிட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

News image

கோப்பு படம்

Updated On :25 டிசம்பர் 2019, 5:51 am

ரச்சகொண்டா பகுதியிலுள்ள உப்பலில் செவ்வாய்க்கிழமை அன்று, 46 வயது பெண் ஒருவர் தனது கணவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சீனிவாஸ் ராவ் சுசிலா தம்பதியினர் தங்கள் மகள் ஆஷிகா ரஞ்சனி மற்றும் மருமகள் தல்லா வினிதா ஆகியோருடன் உப்பல் எல்லையின் ரமன்தாபூரில் வசித்து வந்தனர். பாதிக்கப்பட்டவரும் அவரது கணவரும் நகரத்தில் வெவ்வேறு தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தனர். கடந்த சில நாட்களாக, இருவருக்கும் குடும்பப் பிரச்னைக் காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுக் கொண்டிருந்தது.

செவ்வாய்க்கிழமை காலை, ஆஷிகா ரஞ்சனி மற்றும் வினிதா வேலைக்குச் சென்றுவிட்டனர்.  பிற்பகலில், வாடகைக்கு குடியிருக்கும் நபர், வினிதாவை அழைத்து, கணவன் மனைவுக்கு இடையே கடும் சண்டை ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக வரும்படியும் கூறியிருக்கிறார். இந்த நிகழ்வில் சீனிவாஸ் ராவ் சுசீலாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டார். சம்பவ இடத்தில் சுசீலா ரத்த வெள்ளத்தில் இறந்தார். மனைவியைக் கொலை செய்த சீனிவாஸ் ராவ் தப்பி ஓடிவிட்டார்.

ஆஷிகா மற்றும் வினிதா சென்றடைந்தபோது, ​​சுசீலா ஏற்கனவே இறந்துவிட்டதைக் கண்டு போலீஸை அழைத்தனர்.

உப்பல் போலீஸார் இந்தக் கொலை வழக்கைப் பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.