கேரளாவில் ஒரு நெகிழ்ச்சியான திருமணம்! 65 வயதில் பால்ய நண்பரை கரம்பிடித்த மூதாட்டி

65 வயதான கேரளாவைச் சேர்ந்த லட்சுமி அம்மாள், 66 வயதான தனது 20 ஆண்டு கால நண்பர் மற்றும் காதலரை திருமணம் செய்துகொண்ட நெகிழ்ச்சி சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
கேரளாவில் ஒரு நெகிழ்ச்சியான திருமணம்! 65 வயதில் பால்ய நண்பரை கரம்பிடித்த மூதாட்டி
Published on
Updated on
1 min read

65 வயதான கேரளாவைச் சேர்ந்த லட்சுமி அம்மாள், 66 வயதான தனது 20 ஆண்டு கால நண்பர் மற்றும் காதலரை திருமணம் செய்துகொண்ட நெகிழ்ச்சி சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரளா திருச்சூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் 21 ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவனை இழந்தார். லட்சுமி அம்மாள் கணவரின் உதவியாளராக வேலை செய்தவர் கோச்சானியன். கணவர் மறைந்த பிறகு லட்சுமி அம்மாளை கோச்சானியன்தான் கவனித்து வருகிறார். லட்சுமி அம்மாளின் கணவர் மரணப்படுக்கையில் இருந்த போது, மனைவியை கவனித்துக்கொள்ளும்படி கோச்சனியனிடம் கூறிவிட்டு மறைந்தார். அதன்பேரில், கடந்த 21 ஆண்டுகளாக லட்சுமி அம்மாளுடன் இருந்து அவரை கவனித்து வருகிறார் கோச்சானியன்.

இவர்களின் 20 ஆண்டு கால நட்பு தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. லட்சுமி அம்மாள், தனது 20 ஆண்டு கால நண்பர் கோச்சானியனை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். அதன்பேரில், அரசு முதியோர் இல்லம் இவர்களின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தது. தொடர்ந்து, இன்று அரசு முதியோர் இல்ல கண்காணிப்பாளர் வி.ஜி.ஜெயகுமார் தலைமையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. வித்தியாசமான இந்தத் திருமணத்தில் பலர் கலந்து கொண்டனர். புதுமணத்தம்பதிகளின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com