புது தில்லி: முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதியில் கேரளா அரசு மேற்கொண்டு வரும் கட்டுமான பணிகளுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியாறு புலிகள் சரணாலயத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள தமிழகத்துக்கு சொந்தமான நிலத்தில் மெகா கார் பார்க்கிங் ஒன்றைக் கட்ட கேரள அரசின் வனத்துறை நடவடிக்கை எடுத்தது.
ஆனால் கேரளாவின் இந்த திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2014–ம் ஆண்டிலேயே மனுதாக்கல் செய்தது. அந்த மனுமீதான விசாரணையின்போது நீதிபதிகள், இந்த விவலாராம் தொடர்பாக இரு மாநிலங்களின் உயர் அதிகாரிகள் நேரடியாக சந்தித்து சுமூகமான தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறி இருந்தனர்.
இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதியில் கேரளா அரசு மேற்கொண்டு வரும் கட்டுமான பணிகளுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் மனுதாக்கல் செய்துள்ளது.
இந்த மனுவில் குறிப்பிட்ட பகுதியில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி இருப்பதுடன், ஏற்கனவே உள்ள கட்டிடங்களையும் அகற்ற உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு கோரிகை வைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


