நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், தற்போதைய அரசின் கடைசி கூட்டத் தொடராக இது அமைந்துள்ளது.
இந்நிலையில், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இரு மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேறாத காரணத்தால் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. முத்தலாக் தடைச் சட்டம் மற்றும் குடியுரிமை ஆகிய மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இருப்பினும் எதிர்கட்சிகளின் தொடர் அமளிகளின் காரணமாக அவை மாநிலங்களவையில் நிறைவேற்றுவதில் சிக்கல் நீடித்தது. பொதுவாக மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை என்றாலும் அவை காலாவதியாகாது.
ஆனால், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட வேண்டும். இந்நிலையில், இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாலும், மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலிலும், இந்த இரு மசோதாக்களும் விரைவில் காலாவதியாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 5-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

பருத்தி இறக்குமதி: சுங்க வரியிலிருந்து தற்காலிக விலக்கு - மத்திய அரசு
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



