மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஐந்து விமான நிலையங்களின் பராமரிப்பு ஒப்பந்தம் பெற்ற மோடியின் நண்பர் 

நாட்டில் உள்ள ஐந்து மத்திய தர விமான நிலையங்களை பராமரிக்கும் ஒப்பந்தமானது பிரதமர் மோடியின் நண்பரான கவுதம் அதானியின் குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 பிப்ரவரி 2019, 9:00 pm IST

புது தில்லி: நாட்டில் உள்ள ஐந்து மத்திய தர விமான நிலையங்களை பராமரிக்கும் ஒப்பந்தமானது பிரதமர் மோடியின் நண்பரான கவுதம் அதானியின் குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னௌ, கவுகாத்தி, திருவனந்தபுரம் மற்றும் மங்களூரு ஆகிய விமான நிலையங்களின் பராமரிப்பு நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது என்று, கடந்த ஆண்டு நவம்பரில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.   

பொதுத்துறை மற்றும் தனியார் ஒத்துழைப்பின் அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட விமான நிலையங்களை பராமரிப்பதற்காக பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களிடன் ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரப்பட்டிருந்தது. மொத்தம் 10 நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தை பெற போட்டியிட்டன.

இந்நிலையில் இந்த ஐந்து மத்திய தர விமான நிலையங்களை பராமரிக்கும் ஒப்பந்தமானது பிரதமர் மோடியின் நண்பரான கவுதம் அதானியின் குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

போட்டியிட்ட மொத்தம் பத்து நிறுவனங்களில் அதிகமான தொகைக்கு ஒப்பந்தம் கோரி இருந்த பிரபல தொழிலதிபர் கவுதம் அதானிக்கு சொந்தமான நிறுவனத்துக்கு அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னௌ, திருவனந்தபுரம், மங்களூரு ஆகிய 5 விமானங்களை பராமரித்து நிர்வகிக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. 

கவுகாத்தி விமான நிலைய ஒப்பந்தம் தொடர்பாக தகவல் ஏஎதுவும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.