காங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி அமைவதற்கு வாய்ப்பில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மறைமுகமாகக் கூறியுள்ளார்.
அண்மையில் மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மேற்கு வங்க முன்னாள் அமைச்சருமான நிருபம் சென்னுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த நிகழ்சிக்கு வந்திருந்த சீதாராம் யெச்சூரி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவரிடம், வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் ஓர் அணியை உருவாக்குவதற்காக, காங்கிரஸ் கட்சியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு யெச்சூரி அளித்த பதில்: அரசியல் சூழ்நிலை, மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. எனவே, காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை முதலில் மாநில அளவில் தொடங்கப்பட வேண்டும் என்றார் அவர்.
வரும் மக்களவைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸையும், பாஜகவையும் வீழ்த்துவதற்காக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் ஆர்வமுடன் உள்ளனர். இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையையும் தொடங்கி விட்டனர்.
இந்த நிலையில்தான், காங்கிரஸ்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே தேசிய அளவிலான கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்று யெச்சூரி மறைமுகமாகக் கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அமையும் கூட்டணி மூலமாக, மத்தியில் பாஜக அல்லாத மதச் சார்பற்ற, ஜனநாயக முன்னணி ஆட்சி அமைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









