குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: மிஸோரமில் போராட்டம்

மிஸோரம் மாநிலத்தில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு புதன்கிழமை பல்வேறு 

Updated On :24 ஜனவரி 2019, 12:55 am IST


மிஸோரம் மாநிலத்தில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு புதன்கிழமை பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். 
குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரின் உருவ பொம்மையை எரித்து போராட்டக்காரர்கள் தங்கள் ஆவேசத்தை வெளிப்படுத்தினர். மேலும், 7 மாவட்டங்களின் தலைநகரங்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் எதிர்ப்புப் பேரணியும், முழு அடைப்புப் போராட்டமும் நடத்தப்பட்டது. 
இந்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தும் வாசகங்களை கையில் எந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பியபடி பேரணியில் பங்கேற்றனர். 
மிúஸா ஜிர்லாய் பெளல் (எம்இசட்பி) கட்சியின் மிúஸா மாணவர் கூட்டமைப்பு சார்பில் இப்பேரணி நடைபெற்றது. ஏற்கெனவே, இந்த அமைப்பின் சார்பில் கடந்த 8ஆம் தேதி 11 மணி நேரம் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டிருந்தது. 
எம்இசட்பி தலைவர் கூறுகையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா அமல்படுத்தப்பட்டால், அது ஒட்டுமொத்த மிúஸாரம் மக்களுக்கும் எதிரானதாகவே அமையும் என்றார். 
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கடந்த ஜனவரி 8ஆம் தேதி மக்களவையில் நிறைவேறியது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்த இந்தியாவில் குடியேறிய ஹிந்துக்கள், ஜெயின், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதம் மற்றும் பார்ஸி மதத்தை சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த மசோதா வழிவகுக்கிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.