டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

ஜன. 27-இல் பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்

கோவா மாநில பாஜக தொண்டர்களுடன் வரும் 27-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உரையாட உள்ளார். கோவா மாநில பாஜக வாக்குச்சாவடி நிலையிலான தொண்டர்களுடன் பிரதமர்

News image
Updated On :24 ஜனவரி 2019, 12:57 am IST


கோவா மாநில பாஜக தொண்டர்களுடன் வரும் 27-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உரையாட உள்ளார். கோவா மாநில பாஜக வாக்குச்சாவடி நிலையிலான தொண்டர்களுடன் பிரதமர் மோடி உரையாட இருப்பது இது 2-ஆவது முறையாகும்.
இதுதொடர்பாக கோவா மாநில பாஜக தலைவர் வினய் டெண்டுல்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடக்கு கோவா நாடாளுமன்ற தொகுதியின் பாஜக வாக்குச்சாவடி தொண்டர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மாநில தலைநகர் பனாஜியில் தொண்டர்கள் அனைவரும் ஒன்றுகூட உள்ளனர். அவர்களிடம் காணொளி காட்சி மூலமாக பிரதமர் உரையாட உள்ளார். 
மேலும், பனாஜியின் மண்டோவி நதியில் மூன்றாவது பாலத்தை மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி வரும் 27-ஆம் தேதி திறந்து வைக்கிறார் என்று கூறினார்.
முன்னதாக, தெற்கு கோவா, சதாரா உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகளின் பாஜக வாக்குச்சாவடி தொண்டர்களுடன் ஜனவரி 20-ஆம் தேதி காணொளி காட்சி வழியாக மோடி உரையாடினார். அதைத் தொடர்ந்து வடக்கு கோவா தொண்டர்களுடன் உரையாற்ற உள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.