ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாராமுல்லா மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது குறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது: பாராமுல்லா மாவட்டத்தின் பீன்னர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குப் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கித் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து ஆயுதங்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் குறித்தும், அவர்கள் எந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்? தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது! - ஜோதிமணி

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy

இது மக்கள் உத்தரவு! முதுகில் குத்த முடியாது: காங்கிரஸ்

தவெகவிற்கு விசிக ஆதரவா? - திருமாவளவன் விளக்கம்!
வீடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

