வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வங்கி மோசடி வழக்குகளுக்கு எதிராக நடவடிக்கை : நாடு முழுவதும் சிபிஐ அதிரடி சோதனை 

வங்கி மோசடி வழக்குகள் தொடர்பாக நாடு முழுவதும் 50–க்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ. செவ்வாயன்று அதிரடி சோதனை மேற்கொண்டது.

News image
Updated On :2 ஜூலை 2019, 1:31 pm

DIN

புது தில்லி: வங்கி மோசடி வழக்குகள் தொடர்பாக நாடு முழுவதும் 50–க்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ. செவ்வாயன்று அதிரடி சோதனை மேற்கொண்டது.

நாடு முழுவதும் வங்கி மோசடிகள் தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள், அவற்றின் இயக்குநர்கள், உரிமையாளர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளுக்கு எதிராக மொத்தம் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன.

இந்த வழக்குகளின் மூலமாக மோசடி செய்யப்பட்ட மொத்த தொகை ரூ.640 கோடி ஆகும். இந்த வழக்குகள் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்டு இருந்தன.

இந்நிலையில் வங்கி மோசடி வழக்குகள் தொடர்பாக நாடு முழுவதும் 50–க்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ. செவ்வாயன்று அதிரடி சோதனை மேற்கொண்டது.

இந்த மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சி.பி.ஐ. அதிகாரிகள் ஒருங்கிணைந்த முறையில் பிரத்யேக சோதனையில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.