இஸ்லாமியர்களுக்கு அதிர்ச்சியளித்த அறிவிப்பை திரும்பப் பெற்றது ஏர் இந்தியா 

மெக்காவுக்கு புனிதப்பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வெளியான அறிவிப்பை ஏர் இந்தியா நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.
இஸ்லாமியர்களுக்கு அதிர்ச்சியளித்த அறிவிப்பை திரும்பப் பெற்றது ஏர் இந்தியா 

புது தில்லி: மெக்காவுக்கு புனிதப்பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வெளியான அறிவிப்பை ஏர் இந்தியா நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.

இஸ்லாமியர்களுக்கான ஐந்து கடமைகளுள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதும் ஒன்று. இந்த பயணத்தின் போது மக்காவில் இருந்து 'ஜம் ஜம்' புனித நீரை பாட்டில்களில் எடுத்து வருவது அவர்களின் வழக்கமாகும். ஆனால் அந்த நீரை தங்களது நிறுவன விமானங்களில் எடுத்து வர தடை செய்வதாக ஏர் இந்தியா நிறுவனம் சமீபத்தில் அறிவிப்பினை வெளியிட்டது. இந்த அறிவிப்பானது இந்திய ஹஜ் பயணிகளுக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.

இந்நிலையில் மெக்காவுக்கு புனிதப்பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வெளியான அறிவிப்பை ஏர் இந்தியா நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான அறிவிப்பில் முன்னர் வெளியிட்ட அறிவிப்பினை திரும்ப பெறுவதாகவும், புனித பயணிகளுக்கு ஏற்பட்ட அசெளகரியத்துக்கு வருந்துவதாகவும் விளக்கமளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com