பெங்களூரு: இன்று நடைபெறுவதாக இருந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாத நிலையில் கர்நாடக சட்டப்பேரவை வெள்ளிக்கிழமையன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக சட்டப்பேரவையில் வியாழனன்று குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கு முன்னதாக அவையில் உருக்கமாக பேசிய முதல்வர் குமாரசாமி, 'ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு சதி செய்கிறார்கள்' என்று பேசினார்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வாக்கெடுப்பிற்காக அவை கூடியதும் எழுந்த காங்கிரசைச் சேர்ந்த அமைச்சர் சிவக்குமார் தங்கள் கட்சி எம்.எல்.ஏ ஸ்ரீமந்த் பாட்டீலை பாஜகவினர் கடத்தி விட்டனர் என்று குற்றம் சாட்டினார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவரது புகைப்படத்தை காண்பித்து அமளியில் ஈடுபட்டனர். அதற்கு பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்தனர் .
அதேசமயம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் பாதிப்புகளை ஆய்வு செய்யும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று காங்கிரசின் சித்தராமையா வேண்டுகோள் வைத்தார்.
இறுதியாக காங்கிரஸ் மற்றும் பாஜக எம்.எல்.ஏக்கள் அமளியின் காரணமாக சபை முதலில் அரைமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதைசமயம் நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த உத்தரவிடக்கோரி கர்நாடக ஆளுநருடன், ஜெகதீஷ் ஷட்டர் தலைமையிலான பாஜக குழுவினர் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அத்துடன் மற்ற விஷயங்களை அவையில் விவாதிக்கக் கூடாது எனவும் ஆளுநரிடம் குழுவினர் வலியுறுத்தினர்.
அதையடுத்து கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த வேண்டும் என்று பேரவை சபாநாயகருக்கு, தனது சிறப்பு அதிகாரி மூலம் மாநில ஆளுநர் அறிவுறுத்தினார்.
மீண்டும் சபை கூடியதும் சபாநாயகரின் அதிகாரத்தில் ஆளுநர் எப்படி தலையிடலாம் என்று கூறி, காங்கிரஸ் மற்றும் மத்சசார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்களும் குரல் எழுப்பியதால் அங்கு தொடந்து கூச்சல் குழப்பம் நிலவியது.
இதையடுத்து சபையை வெள்ளிக்கிழமை காலை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ரமேஷ் அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மழையால் பாதித்த நெற்பயிருக்கு இழப்பீடு கோரி சாலை மறியல்

அரசுப் பள்ளியில் ஆண்டு விழா

வலங்கைமான் புறவழிச்சாலை பணி தொடக்கம்

ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

