/

நிலவில் எதைத் தேடச் சென்றிருக்கிறது சந்திராயன்-2 (விடியோ)

சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 - எம்1 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் திங்கள்கிழமை நிலைநிறுத்தப்பட்டது. 

News image
சந்திரயான்-2
Updated On :31 ஜனவரி 2024, 9:37 am

DIN

சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 - எம்1 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் திங்கள்கிழமை நிலைநிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், சந்திரயான் விண்கலத்தின் செயல்பாடு குறித்து பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், சந்திரயான்-2 விண்வெளியில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததுபோலவே விண்கலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சரியான திசையில் பயணித்து வருகிறது. சந்திரயான்- 2 விண்கலத்தின் அடுத்தகட்ட முக்கிய செயல்பாடுகள் குறித்து உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்கப்படும். 

தரைக்கட்டுப்பாட்டு அறையில் உள்ள விஞ்ஞானிகள் விண்கலத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

YouTube video thumbnail

விண்கலத்தை சுற்றுவட்டப் பாதையில் படிப்படியாக நிலை உயர்த்தி, பின்னர் அதை நிலவை நோக்கி நகர்த்தி, நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு கொண்டுசெல்லும் பணியை அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு விஞ்ஞானிகள் மேற்கொள்வர். செப்டம்பர் 2-ஆம் தேதி விண்கலத்தின் ஆர்பிட்டர் பகுதிக்குள் இருந்து லேண்டர் பிரித்துவிடப்படும். இந்த லேண்டர் பகுதி தொடர்ந்து 4 நாள்கள் நிலவைச் சுற்றி வந்து,  செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் மெதுவாகத் தரையிறக்கப்படும்.

லேண்டர் தரையிறங்கிய 4 மணி நேரத்துக்குப் பின்னர், அதனுள் இருக்கும் 6 சக்கரங்களுடன் கூடிய ரோவர் நிலவில் இறக்கிவிடப்படும்  என்று இஸ்ரோ ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

நிலவின் தென்துருவத்தில் தண்ணீர் மற்றும் பிற கனிமங்கள் இருப்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படுவதோடு, சூரியக் குடும்பம் உருவானது குறித்து புரிந்துகொள்வதற்கான தகவல்களைப் பெறுவதுமே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.