8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

முத்தலாக் மசோதா: மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எதிரெதிர் நிலை எடுத்த அதிமுக 

முத்தலாக் மசோதா குறித்து மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அதிமுக எதிரெதிர் நிலை எடுத்துள்ள விவகாரம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published On :31 ஜனவரி 2024, 3:10 pm IST

புது தில்லி: முத்தலாக் மசோதா குறித்து மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அதிமுக எதிரெதிர் நிலை எடுத்துள்ள விவகாரம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில் செவ்வாயன்று  மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவைத் சட்ட அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.

முன்னதாக மக்களவையில் இம்மசோதா குறித்த விவாதம் நடைபெற்ற போது அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினரான தேனி ஓ.பி.ரவீந்திரநாத், முத்தலாக் சட்டத்தை ஆதரித்து பேசி வாக்களித்தார். இது இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை அதிமுக மீது ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் மாநிலங்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய அதிமுக மாநிலங்களவை குழுத் தலைவரான நவநீதகிருஷ்ணன் கூறியதாவது:

இந்த சட்டத்தின் ஒரு சில பிரிவுகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இந்த சட்டமானது ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டதுடன் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. எனவே இது சமூகத்தில் உண்டாக்க கூடிய விளைவுகளையும் கருத்தில் கொண்டு, இந்த மசோதாவை நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான எஸ்.ஆர். பாலசுப்ரமணியனும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஒரே விவகாரத்தில் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அதிமுக எதிரெதிர் நிலை எடுத்துள்ள விவகாரம் கட்சியினரிடையே தலைமையின் நிலைப்பாடு  குறித்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.