மாயாவதியின் முன்னாள் செயலாளரிடம் ரூ.225 கோடி பினாமி சொத்து பறிமுதல்

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் முன்னாள் செயலாளரிடம் இருந்து ரூ.225 கோடி மதிப்புள்ள பினாமி சொத்து ஆவணங்களை வருமான வரி துறை பறிமுதல் செய்துள்ளது.
மாயாவதியின் முன்னாள் செயலாளரிடம் ரூ.225 கோடி பினாமி சொத்து பறிமுதல்
Published on
Updated on
1 min read

லக்னௌ: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் முன்னாள் செயலாளரிடம் இருந்து ரூ.225 கோடி மதிப்புள்ள பினாமி சொத்து ஆவணங்களை வருமான வரி துறை பறிமுதல் செய்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதியின் முன்னாள் செயலாளர் நெட் ராம்.  உத்தர பிரதேசத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றவர் . கடந்த 2002-2003ம் ஆண்டில் மாயாவதி உ.பி முதல்வராக இருந்தபோது அவருக்கு செயலாளராக இருந்தவர்.

அத்துடன்  கலால் துறை தலைவர், சர்க்கரை தொழிற்சாலை மற்றும் கரும்பு துறை, உணவு வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் இவர் இருந்துள்ளார்.இவர் மீது ரூ.90 கோடி வரை வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தில்லி மற்றும் லக்னௌ நகரங்களில் இவரது வீடு உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி துறையினர் செவ்வாயன்று சோதனை நடத்தினர்.

26 மணிநேரம் வரை நீடித்த இந்த சோதனையில் ரூ.1.64 கோடி மதிப்பிலான பணம் கைப்பற்றப்பட்டது.  இவர் பெயரில் உள்ள வங்கி லாக்கரை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

அத்துடன் ரூ.50 லட்சம் மதிப்புள்ள மோண்ட் பிளாங்க் பேனாக்கள், பினாமி பெயரிலான 4 ஆடம்பர ரக கார்கள் மற்றும் ரூ.225 கோடி மதிப்பிலான சட்டவிரோத சொத்துகளுக்கான ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற உறவினர்கள், பங்குகள் வைத்துள்ள 30 துணை நிறுவனங்களுக்கான ஆவணங்களையும் கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

நெட் ராம் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் தனக்கு ஒரு தொகுதி ஒதுக்கும்படி மாநிலக் கட்சி ஒன்றிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார். இந்த தகவலை அடுத்தே வருமான வரித்  துறையின் கண்காணிப்பின் கீழ் அவர் வந்துள்ளார் என துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com