குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

உங்கள் குழந்தைகள் காவலாளிகளாக வேண்டுமா? மோடிக்கு ஓட்டுப் போடுங்கள்: கேஜரிவால் கிண்டல் 

உங்கள் குழந்தைகள் காவலாளிகளாக வேண்டும் என்றால் மோடிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று தில்லி முதல்வர் கேஜரிவால் கிண்டல் செய்துள்ளார்.

News image
Updated On :20 மார்ச் 2019, 7:48 pm IST

புது தில்லி: உங்கள் குழந்தைகள் காவலாளிகளாக வேண்டும் என்றால் மோடிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று தில்லி முதல்வர் கேஜரிவால் கிண்டல் செய்துள்ளார்.

ரஃபேல் ஊழல் விவகாரத்தில் 'திருடனாக மாறிய காவலாளி' என்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுலின் தீவிர விமர்சனத்தை சமாளிக்கும் பொருட்டு, 'நானும் கூட காவலாளி' தான் என்கிற பிரசாரத்தை பிரதமர் மோடி  ட்விட்டரில்  மேற்கொண்டு வருகிறார்.

பா.ஜனதா தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களும் தங்கள் பெயர்களுக்கு முன் காவலாளி என்னும் பொருள்படும் 'சவுகிதார்' எனும் வார்த்தையை சேர்த்துப் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் உங்கள் குழந்தைகள் காவலாளிகளாக வேண்டும் என்றால் மோடிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று தில்லி முதல்வர் கேஜரிவால் கிண்டல் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

பிரதமர் மோடி ஒட்டுமொத்த தேசத்தையும் காவல்காரராக மாற்ற முயற்சிக்கிறார். நாட்டு மக்கள் தங்கள் குழந்தைகளை  காவல்காரராக உருவாக்க வேண்டும் என்று விரும்பினால், அவர்கள் தாராளமாக மோடிக்கு வாக்களிக்கலாம்.

ஆனால் தங்கள் குழந்தைக்கு நல்ல கல்வி தேவை, எதிர்காலத்தில் மருத்துவராகவோ, பொறியாளராகவோ, வழக்கறிஞராகவோ அவர்கள் மாற வேண்டும் என்று மக்கள் விரும்பினால் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.