மீரட்: உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்ட்ரிய லோக் தள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியை 'சாராயம்' என்று பிரதமர மோடி விமர்சித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் பிரதமர் மோடி வியாழனன்று மீரட் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய லோக் தள் மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் பெயர்களில் இருந்து முதல் பகுதி / எழுத்தை எடுத்து அக்கூட்டணியை 'சராப்' என்று விமர்சித்தார்.
'சராப்' என்ற உருது வார்த்தைக்கு கானல் நீர் / மாயம் என்று பொருள். ஆனால் ஹிந்தியில் இதே ஒலியில் அமைந்துள்ள 'ஷ்ராப்' என்ற வார்த்தைக்கு சாராயம் என்று பொருள்.
எனவே உத்தரபிரதேசத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை 'சாராயம்' என்று பிரதமர மோடி விமர்சித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக உ.பி முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'வெறுப்பின் மனதினை எங்கும் பரப்பிக் கொண்டிருப்பவர்கள் தற்போது தேர்தல் நெருங்கி வருவதால், இரண்டு வார்த்தைகளுக்கு வித்தியாசம் தெரியாமல் மாயக்காட்சிகளை உருவாக்குகிறாரகள்' என்று தெரிவித்துள்ளார்.
அதேசமயம் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா செய் தியாளர்களிடம் பேசும்போது, 'இதுதான் ஒரு பிரதமர் பேசும் முறையா? இதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? உங்கள் வார்த்தைகளை வாபஸ் பெற்று உ.பி மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்' என்று மோடியிடம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருப்புடன் வெளியாகும் நூறு சாமி?

சூர்யவன்ஷிக்கு ரசிகரான ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ்!
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

நீட் தேர்வு நுழைவுச் சீட்டு திடீர் ஒத்திவைப்பு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


