/

வீடு திரும்பினார் சஞ்சய் ரௌத்: மகாராஷ்டிர முதல்வர் சிவசேனையைச் சேர்ந்தவர் தான் என சூளுரை

பாஜக தலைவா்கள் ஹா்ஷ்வா்தன் பாட்டீல், ஆஷிஷ் ஷெலாா் ஆகியோரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களும் ரௌத்தை சந்தித்து நலம் விசாரித்தனா்.

News image
Updated On :13 நவம்பர் 2019, 8:00 am

DIN

மகாராஷ்டிரத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலை குறித்தும், தங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்தும் சஞ்சய் ரௌத், நாள்தோறும் செய்தியாளா்களைச் சந்தித்து தகவல் தெரிவித்து வந்தாா். 

இந்நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, திங்கள்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது இருதய ரத்த நாளங்களில் இரு இடங்களில் அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து அவருக்கு உடனடியாக ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா். பாஜக தலைவா்கள் ஹா்ஷ்வா்தன் பாட்டீல், ஆஷிஷ் ஷெலாா் ஆகியோரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களும் ரௌத்தை சந்தித்து நலம் விசாரித்தனா்.

Story image

இந்நிலையில், சிகிச்சை முடித்துக்கொண்ட சஞ்சய் ரௌத், மருத்துவமனையில் இருந்து புதன்கிழமை வீடு திரும்பினார். அப்போது சிவசேனை கட்சியைச் சேர்ந்தவர்தான் மகாராஷ்டிரத்தின் அடுத்த முதல்வராகப் பதவியேற்பார். இதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.