மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட எந்த நிதியும் வசூலிக்கப்படவில்லை: வி.ஹெச்.பி

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட எந்த நிதியும் வசூலிக்கப்படவில்லை என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது. 

News image
Updated On :17 நவம்பர் 2019, 7:31 am

DIN

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட எந்த நிதியும் வசூலிக்கப்படவில்லை என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது. 

அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தை உரிமை கோருவது தொடா்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும் அதே நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளாக இருந்துவந்த பிரச்னை இந்தத் தீர்ப்பின் மூலமாக முடிவுக்கு வந்துள்ளது. 

மேலும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு 3 மாதத்திற்குள் அறக்கட்டளையை நியமிக்கவும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ராம ஜென்மபூமி இயக்கத்திற்கு தலைமை தாங்கிய விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு முக்கிய ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பலர் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ள நிலையில், தற்போது அயோத்தி ராமர் கோவிலுக்கு எந்த நிதியும் வசூலிக்கப்படவில்லை. அதற்கான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. 

மேலும், வி.ஹெச்.பி பெயரில் சட்ட விரோதமாக பணம் வசூலிப்பதை தடுப்பதற்காகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.