இ-காரில் நாடாளுமன்றம் வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடருக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், இ-காரில் வருகை தந்தார்.
இ-காரில் நாடாளுமன்றம் வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்

நாடாளுமன்றத்தின் குளிா்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (நவ.18) தொடங்கி டிசம்பா் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது, தற்போது புதிதாக அமைந்துள்ள 17-ஆவது மக்களவையின் 2-ஆவது கூட்டத்தொடராகும். 

தலைநகர் தில்லியில் கடந்த சில ஆண்டுகளாகவே காற்று மாசு உச்சகட்ட ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது. எனவே காற்று மாசை குறைக்கும் விதமாக மத்திய அரசும், தில்லி அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக இ-கார்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் அதுதொடர்பான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடருக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், இ-காரில் வருகை தந்தார். இச்செயல் அங்குள்ள பலரின் கவனத்தைப் பெற்றது. இதுகுறித்து பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது,

காற்று மாசை குறைக்கும் விதமாக இ-கார்களுக்கு மாறும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே நாம் அனைவரும் இணைந்து காற்று மாசை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். பொது போக்குவரத்து மற்றும் இ-கார்கள், இ-பைக் உள்ளிட்டவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com