ஹரியானா மாநிலம் சிர்சா நகரில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவன், தனது வகுப்புத் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்துள்ளான்.
இதுகுறித்து ஹரியானா சிவில் மருத்துவமனை மருத்துவர்கள், காவல்துறையை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அதன்பின்னரே போலீசாருக்கு இந்த சம்பவம் குறித்து தெரிய வந்துள்ளது. மேலும், சிறுமியின் பெற்றோர்களும் புகார் தெரிவிக்கவே, அந்த சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அந்த சிறுவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துணை காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் இதுகுறித்து கூறுகையில், மதிய உணவு இடைவேளையின் போது தனது மகளுக்கு, அவளுடன் படிக்கும் மாணவன் ஒருவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயார் புகார் கூறியதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செயின்ட் - கோபைன் தொழிற்சாலையைப் பார்வையிட்ட முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
நேபாளத்தில் கலவரம்: உ.பி.யில் 7 மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

மேக்மைட்ரிப் முதல் காலாண்டு லாபம் 8.6% அதிகரிப்பு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



