/

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தூய்மைப்பணியில் ஈடுபட்டார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:05 am

DIN

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தூய்மைப்பணியில் ஈடுபட்டார்.

பிரதமர் மோடியின் 69ஆவது பிறந்த நாள் செப்டம்பர் 17-ஆம் தேதி வருகிறது. இதனை முன்னிட்டு செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு சேவை வாரம் கொண்டாட பாஜக முடிவு செய்துள்ளது. 

இந்த வாரத்தில் வறுமையில் வாடும் மக்களுக்கு தேவையான நலதிட்ட உதவிகளில் கட்சி தொண்டர்கள் ஈடுபடவுள்ளனர். பொது மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை தீர்த்து வைப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில் சேவை வாரத்தின் முதல் நாளான இன்று தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற பாஜக கட்சித் தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் இணைந்து தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். 

அத்துடன் பாஜக நிர்வாகிகள் விஜய் கோயல், விஜேந்தர் குப்தா உள்ளிட்டோரும் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் குழந்தைகளுக்கு அவர்கள் பழங்கள் வழங்கினர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.