இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்குவதில் பாதிப்பு இருக்காது: சவூதி அரேபியா உறுதி

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கப்படுவதில் எந்தப் பாதிப்பும் இருக்காது என சவூதி அரேபியா உறுதியளித்துள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 


இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கப்படுவதில் எந்தப் பாதிப்பும் இருக்காது என சவூதி அரேபியா உறுதியளித்துள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 
சவூதி அரேபியாவிலுள்ள 2 கச்சா எண்ணெய் ஆலைகள் மீது கடந்த சனிக்கிழமை ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு யேமனைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர். இத்தாக்குதல் காரணமாக, சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதியாகக் குறைந்துள்ளது. இதனால், அந்நாட்டிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவு குறைய வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், சவூதி அரேபிய பெட்ரோலிய அமைச்சர் அப்துலஸீஸ் பின் சல்மானை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தர்மேந்திர பிரதான் பேசினார். அப்போது, இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுவது தொடர்பாக அவருடன் தர்மேந்திர பிரதான் ஆலோசனை நடத்தினார். 
இது தொடர்பாக தர்மேந்திர பிரதான் கூறுகையில், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்குவதில் எந்தப் பாதிப்பும் இருக்காது என அப்துலஸீஸ் உறுதியளித்தார். சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி, இந்த மாத இறுதிக்குள் இயல்புநிலைக்குத் திரும்பும் எனவும், நவம்பர் மாத இறுதிக்குள் உற்பத்தி மேலும் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்தார் என்றார்.
சவூதி அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு மாதந்தோறும் 20 லட்சம் டன் அளவிலான கச்சா எண்ணெய்  இறக்குமதி செய்யப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் 13 லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள கச்சா எண்ணெய் விரைவில் இறக்குமதி செய்யப்படவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com