/

உ.பி., பிகார் மற்றும் குஜராத்துக்கு கனமழை வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

3 மாநிலங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :27 செப்டம்பர் 2019, 6:00 am

DIN

உத்தரப்பிரதேசம், பிகார் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் வெள்ளிக்கிழமை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இமாச்சலப்பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், சௌராஷ்டிரா, கட்ச், கொங்கன் மற்றும் கோவா ஆகிய இடங்களில் பரவலாக இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 

குஜராத் கடற்கரையில் மோசமான வானிலை நிலவும். எனவே அடுத்த சில நாட்களுக்கு இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.