பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு: 32 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக வெங்கய்ய நாயுடு பெருமிதம்

கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவில் 32 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெங்கய்ய நாயுடு பெருமிதம் தெரிவித்தார். 

News image
Updated On :7 ஆகஸ்ட் 2019, 1:08 pm IST

புதிய மக்களவை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஜூன் மாதம் 17-ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் ஜூலை 26-ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கூட்டத்தொடரை ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. 

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்குவதற்கான தீர்மானம், ஜம்மு-காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா-2019, சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத் திருத்த (யுஏபிஏ) மசோதா, முத்தலாக் தடை மசோதா, திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா-2019, தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா, உச்சநீதிமன்ற நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கையை 30-லிருந்து, 33-ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதா, வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா, தொழிலாாளர் சட்டத்திருத்த மசோதா, ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவுச்சின்னம் மசோதா, ஊதியங்கள் சட்ட மசோதா, அணை பாதுகாப்பு மசோதா, ஆர்டிஐ சட்டத்திருத்த மசோதா, போக்ஸோ சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட 32 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 

இந்நிலையில், கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவில் 35 அமர்வுகளில் 32 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பெருமிதம் தெரிவித்தார். 

பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு மாநிலங்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். சுஷ்மா ஸ்வராஜ் மறைவால் சிறந்த நாடாளுமன்ற வாதியையும், மக்களின் உண்மையான குரலையும் இந்த தேசம் இழந்துள்ளது என மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசினார்.

இதையடுத்து மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.