'நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர்': நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி கொந்தளிப்பு!

பாஜக எம்பி பிரக்யா தாகுர் நாடாளுமன்றத்தில் காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை தேச பக்தர் எனக் குறிப்பிட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
'நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர்': நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி கொந்தளிப்பு!


பாஜக எம்பி பிரக்யா தாகுர் நாடாளுமன்றத்தில் காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை தேச பக்தர் எனக் குறிப்பிட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நாடாளுமன்றத்தில் சிறப்பு பாதுகாப்பு படைப் பிரிவு திருத்த மசோதா மீதான விவாதத்தில், தான் ஏன் மகாத்மா காந்தியை கொன்றேன் என்பது குறித்த கோட்சேவின் கருத்தை திமுக எம்பி ஆ. ராசா மேற்கோள் காட்டினார். அப்போது குறுக்கிட்ட பிரக்யா தாகுர், "ஒரு தேச பக்தரை நீங்கள் உதாரணமாக அளிக்க முடியாது" என்றார்.

இதையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரக்யா தாகுரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, பாஜக எம்பி-க்களும் பிரக்யா தாகுரை அமைதி காக்குமாறு வலியுறுத்தினர்.

இதன்பிறகு பேசிய ஆ. ராசா, அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டே பாதுகாப்பு குறித்து முடிவு செய்ய வேண்டுமே தவிர, அரசியல் காரணங்களைக் கொண்டு அல்ல என்று கூறி மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு உள்துறை அமைச்சரைக் கேட்டுக்கொண்டார்.

பிரக்யா தாகுர் நாதுராம் கோட்சேவை தேச பக்தர் என குறிப்பிடுவது இது முதன்முறையல்ல. ஏற்கெனவே ஒரு முறை, "நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தராக இருந்தார். இப்போதும் தேசபக்தராக இருக்கிறார். எப்போதும் தேசபக்தராகத்தான் இருப்பார். அவரை தீவிரவாதி என்று கூறுபவர்கள், தங்களைத் தாங்களே விமர்சித்துக் கொள்ள வேண்டும்" என சர்ச்சைக்குரிய முறையில் பேசினார்.

இந்நிலையில், அவர் இந்த கருத்தை மீண்டும் பதிவு செய்திருப்பது, அதுவும் நாடாளுமன்றத்திலேயே பதிவு செய்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com