முடிவுக்கு வந்தது மூன்று மாத தென்மேற்கு பருவமழை: எங்கே அதிக மழை தெரியுமா? 

மூன்று மாத தென்மேற்கு பருவமழை காலமானது முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் எங்கெங்கே அதிக மழை பெய்துள்ளது என்ற விபரங்களை தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ளார்.
முடிவுக்கு வந்தது மூன்று மாத தென்மேற்கு பருவமழை: எங்கே அதிக மழை தெரியுமா? 

சென்னை: மூன்று மாத தென்மேற்கு பருவமழை காலமானது முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் எங்கெங்கே அதிக மழை பெய்துள்ளது என்ற விபரங்களை தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் முகநூல் பக்கத்தில் திங்கள் மாலை வெளியாகியுள்ள பதிவில், 'ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மூன்று மாதத்திற்கான தென்மேற்கு பருவமழை காலம் முடிவுக்கு வந்துள்ளது' என்று கூறப்பட்டுள்ளதுடன் குறைந்த பட்சம் 5500 மிமீ மழைபொழிவுடன், இந்த காலகட்டத்தில் இந்தியாவிலேயே அதிக அளவு மழை பொழிந்துள்ள நகரங்கள் குறித்த பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி முதல் மூன்று இடங்களை மஹாராஷ்ரா மாநிலம்பிடித்துள்ளது. அவை பின்வருமாறு:

1. பதர்புஞ்ச் - 7554 மிமீ

2. அம்போலி - 7521 மிமீ

3. தம்ஹினி - 7520 மிமீ  

அதேபோல் மெட்ரோ நகரங்கள் மற்றும் அதன் விமான நிலையங்களில் அதிக அளவு மழைப்பொழிவு பட்டியலில் முதல் மூன்று இடங்கள் பின்வருமாறு:

1. மும்பை விமான நிலையம் - 2554 மிமீ 

2. மும்பை நகரம் - 1875 மிமீ

3.சூரத் - 1128 மிமீ

இந்த பட்டியலில் 444 மிமீ மழைபொழிவுடன் சென்னை விமான நிலையமானது 9-ஆவதுஇடத்தில் உள்ளது.

அதேசமயம் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மஹாராஷ்ராவில் இந்த ஆகஸ்ட் மாதம் நல்ல பருவ மழை பெய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com