/

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கரோனா நோயாளி தற்கொலை முயற்சி

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த நோயாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :27 ஜனவரி 2024, 4:22 pm

DIN

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த நோயாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. 

நாட்டில் கரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. எனினும் இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 3,072 போ் அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒரே நாளில் நேற்று மட்டும் 525 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 490 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக தில்லியில் 445 பேரும், தமிழகத்தில் 485 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக 75 போ் பலியாகியுள்ளனா். 212 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனா்.

இந்த நிலையில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த நோயாளி 3ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.