ஹரியாணாவில் கரோனா பாதிப்பு 161 ஆக உயர்வு
ஹரியாணாவில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது.


சண்டிகர்: ஹரியாணாவில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் பரவியுள்ள கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 96 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் ஹரியாணாவில் கரோனா தொற்றுக்கு இதுவரை 161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை 3,496 பேருக்குப் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2,443 பேருக்கு கரோனா இல்லை என்று உறுதியாகியுள்ளது. மேலும், 892 பேரின் முடிவுக்காகக் காத்திருக்கின்றனர்.
அதன்படி, ஹரியாணாவில் பதிவான மொத்த கரோனா வைரஸ் வழக்குகளில், 10 வெளிநாட்டினர், 64 பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். குருக்கிராம், 38 நுஹ் 38, பல்வால் 28, ஃபரிதாபாத் 28 வழக்குகள் பதிவாகியுள்ளன.
தில்லி மாநாட்டிற்குச் சென்றுவந்தவர்களின் தொடர்புடைய 106 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஹரியாணா சுகாதார அமைச்சர் அணில் விஜ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...