இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

குஜராத்தில் மேலும் 2 பேர் பலி: கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 308 ஆக உயர்வு

குஜராத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர் என்று அந்நாட்டு மருத்துவ சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :10 ஏப்ரல் 2020, 7:37 am

PTI


குஜராத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர் என்று அந்நாட்டு மருத்துவ சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கடந்த 12 மணி நேரத்தில் பலியான இருவரில் அகமதாபாத்தைச் சேர்ந்த 40 வயதுடையவரும், காந்தி நகரத்தைச் சேர்ந்த 81 வயதுடையவரும் ஆவர். 

இதுகுறித்து சுகாதார முதன்மைச் செயலாளர் ஜெயந்தி ரவி கூறுகையில்,

அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காந்தி நகரத்தைச் சேர்ந்த முதியவர் கரோனா பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்ததாக அவர் கூறியுள்ளார். 

கடந்த 12 மணி நேரத்தில் குஜராத்தில் 46 பேருக்குப் புதிதாக  கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை மொத்தம் 308 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதில், 17 பேர் வதோதராவிலும், அகமதாபாத் (11), ராஜ்கோட் (5), பருச் (4), பாவ்நகர் (4), படான் மற்றும் குச்-யில்  தலா இரண்டு, காந்திநகரில் ஒன்றும் பதிவாகியுள்ளதாகச் சுகாதார முதன்மை செயலாளர் ஜெயந்தி ரவி தெரிவித்தார்.

அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவருக்கு கரோனா இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதால் அவருடைய இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக முதன்மைச் செயலர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.